தேசிய கணக்காய்வு சட்டம் அமுலில்!

Tuesday, July 31st, 2018

நாளை முதல் தேசிய கணக்காய்வு சட்டமூலம் அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியால் வெளியாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டது.

இந்தநிலையில் நாளை முதல் இது சட்டமாக நாட்டில் அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: