தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன – களப்பணியாற்ற தயராகுங்கள் – ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 2nd, 2019

எமது மக்களின் அரசியல் உரிமைக்காகவும், எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அன்றாடப் பிரச்சினைக்காகவும் மக்களோடு இணைந்து பணியாற்றி வாக்கு வங்கிகளைக் வைத்துக் கொள்ளும் பிராந்தியக் கட்சியாகிய நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு வலுச்சேர்க்க பணியாற்றத் தயாராக இருக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பிரதேச நிர்வாக, உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பு கடந்த 29.09.2019 அன்று பருத்தித்துறை பிரதேச கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலரும் பல ஆருடங்களை கூறிவருகின்றனர். அது அவர்களுடைய எண்ணங்களும், விருப்பங்களாகவும் இருக்கலாம். ஆனால், வாக்களிப்பது வாக்காளர்களே.

எனவே பிராந்தியக் கட்சியாகிய நாம் வாக்குப் பலத்துடனேயே பல தேர்தல்களை எதிர்கொண்டிருந்தோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல்காலங்களிலும் கூட வெளிப்படையாக வேட்பாளர்களை ஆதரிக்குமாறும் அதற்கு நாம் உத்தியோகபூர்வமாக பொறுப்புக்களையும் கூறினோம். அதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தோம். இருப்பினும் எம்மால் முடிந்தளவு இணக்க அரசியலின் ஊடாக பலவிடயங்களை நடைமுறைச் சாத்தியமாக நிறைவேற்றியிருக்கின்றோம்.

அதனூடாக பயன்பெற்றது எமது மக்களும், எமது பிரதேசமுமே.
வடக்கில் தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன. ஆகவே எதிர்வரும் தேர்தலில் வாக்கு வங்கியை பலமாகக் கொண்ட நாம் கட்சி தலைமையின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனநாயகக் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி எமது மக்களின் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி களப்பணியாற்ற தயராகுமாறும் கேட்டுக்கொண்டார்.

Related posts: