தேசிய ஊடக மத்தியத்திற்கு புதிய தலைவர்!

Tuesday, August 30th, 2016

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய ஊடக மத்திய நிலையத்தை விசும்பாய பகுதியில் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக நிர்வாகம் செய்யப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் இரண்டு பிரதிநிதிகளுடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று இந்த தேசிய ஊடக மத்திய நிலையத்தை கண்காணிக்க உள்ளது.

அரசாங்கத் தகவல்களை வழங்குதல் புதிய சட்டங்கள் தொடர்பில் ஊடகங்களையும் மக்களையும் தெளிவுபடுத்துதல் அரசாங்கம் பற்றிய பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டால் அதனை திருத்துதல் உள்ளிட்ட பல பணிகள் இந்த புதிய ஊடக மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளது.

24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் வகையில் இந்த புதிய காரியாலயம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 20 தகவல் அதிகாரிகளும் 20 இணைய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு மேலதிகமாக இந்த நிறுவனம் இயங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: