தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி முதலாம் இடம்!

Friday, January 4th, 2019

2018 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடம் பெற்றுள்ளதாகப் பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச திணைக்களங்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியிலேயே கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கான விருது கடந்த நவம்பர் மாதம் வழங்க ஏற்பாடாகியிருந்தபோதும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் - தேசி...