தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் – இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021

தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் உலகளாவிய இலங்கை 69 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு அறிவித்துள்ளது.

இத்துடன் இணையக்குற்றங்களை தடுத்தல் மற்றும் இணையக்குற்றங்களை முகாமைப்படுத்தல் என்ற அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இந்த தரப்பட்டியலில் இலங்கை 98 ஆவது இடத்தில் இருந்தது. எனினும் 2021 இல் முன்னேற்றம் அடைந்து 69 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 160 நாடுகளில் இலங்கை 69 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகளாவிய இணையப் பாதுகாப்பு சுட்டியில் இலங்கை 83 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தியில் 63 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த சுட்டியின்படி அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரித்தானியா 18 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: