தேசிய அளவிலான வீடமைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத்துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, November 12th, 2020

நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கியதாக குறைந்த மத்தியதர மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோருக்காக பல வீடமைப்பு திட்டங்களை ஒரே முறையில் ஆரம்பிக்குமாறு நிர்மாணத் துறை முன்னோடிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

நிர்மாணத் துறையில் உள்ள 10 நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

அத்துடன் புதிய தொழிநுட்பம் மற்றும் முறைமைகளை பயன்படுத்தி ஆக்கத்திறனுடனும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையிலும் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் மூன்று வருடங்களில் 15 ஆயிரம் மத்திய வகுப்பினருக்காக வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்படுகின்றது

அத்துடன் குறைந்த மற்றும் உயர் மத்திய வருமானம் பெறுவோரினதும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் நான்கு வருடங்களில் 36 ஆயிரத்து 884 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

பேலியகொட கொலன்னாவ புளுமெண்டல் கொட்டாவ-மாகும்புர கொட்டாவ-பலதுருவத்த பொரலஸ்கமுவ மாலபே கண்டி- கெட்டம்பே மற்றும் அநுராதபுரம் நகரங்களை மையப்படுத்தி முதற்கட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் நிர்மாணத் துறையில் உள்ள உள்நாட்டு தொழிற்துறையினருக்கு அதில் இணைந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி நிறைவேற்று தொழில்முயற்சி மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள பெருமளவு இளைஞர்களின் வீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதற்காக 30 வருடங்களில் செலுத்தி முடிக்கக்கூடிய வகையில் இலகு வட்டி வீதத்தில் கடன் வழங்க வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் பல தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: