தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் இல்லை – சபாநாயகர்!

Friday, February 23rd, 2018

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள் தங்களுக்கு இடையிலான உடன்படிக்கையை முன்கொண்டு செல்ல இணக்கம் வெளியிட்டுள்ளதனால் சட்டரீதியான பிரச்சினைகள்எவையும் இல்லை என்று சட்டத்துறை நிபுணர்கள் தமக்கு விளக்கமளித்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் சட்டரீதியான விடயங்களை பூரணப்படுத்த மேலதிகமாக ஏதேனும் செய்ய வேண்டியுள்ளதா? என்பது குறித்துஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: