தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!
Friday, May 14th, 2021தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நடைமுறைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!
சாரதிகளுக்கான எச்சரிக்கை!
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
|
|