தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்!

Friday, May 31st, 2019

தேசிய அடையாள அட்டையில் அவரவர் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தேசிய அடையாள அட்டையில் நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டது. எதிர்காலத்தில் மரபணுப் பரிசோதனை தரவு அல்லது கைவிரல் அடையாளத் தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் கை விரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்துள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts: