தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!

Friday, July 5th, 2019

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கணினி பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இன்றைய தினம் ஒரு நாள் சேவையை வழங்கமுடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts: