தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, March 19th, 2019

நடப்பாண்டில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் ஒன்று, பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்ப மற்றும் இயக்க செயற்பாட்டு ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

Related posts: