தேசியக் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறியோர் தொடர்புகொள்ளவும்!

Tuesday, August 28th, 2018

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறியவர்கள் பட்டமளிப்பு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.

பட்டமளிப்பு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்தாண்டுகளில் கல்விகற்று வெளியேறியவர்களைத் தொடர்புகொள்ளுமாறு யாழ்ப்பாணத் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி பட்டமளிப்பு நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பிற்காக 2012-2014, 2013-2015, 2014-2016 ஆகிய ஆண்டுகளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறியவர்கள் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம் 0776132270, 0212230036 அவர்களுடன் அல்லது பதிவாளருடன் 0776184363 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ச.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related posts: