தேங்காய்,  தேங்காய் எண்ணெய்யின் விலை திடீரென அதிகரிப்பு!

Wednesday, April 4th, 2018

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சந்தைகளில் தேங்காயின் விலை 100 ரூபாவாகவும், தேங்காய் எண்ணெய்யின் விலை 330 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைபாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதனால் புதுவருடத்தை கொண்டாட தயாராகும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

சில வர்த்தகர்கள் எழுந்தமானமாக பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

Related posts: