தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு – சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!

மீள் ஏற்றுமதிக்காக சுங்கப்பிரிவினால் பொறுப்பேற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களில் ஒரு நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்
யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|