தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!

Wednesday, April 21st, 2021

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதை எதிர்காலத்தில் நிறுத்த உள்ளதாக தெங்கு, கித்துள், பனை பயிர்ச்செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்கான தேங்காய் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: