தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!

Thursday, February 14th, 2019

அடுத்த வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை அல்லது விநியோகம் தொடர்பிலான தகவல்களை குறித்த பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: