தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!
Tuesday, September 29th, 2020செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற தேங்காய் ஏலத்தில், தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரம் தேங்காய்களுக்காக 61 ஆயிரம் ரூபாய் என்ற அதிகப்பட்ச விலையும் 51,500 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த தேங்காய் ஏலத்தில் பெறப்பட்ட சராசரி விலை 56.49 ரூபாவாகும். இதன்போது குறித்த ஏலத்தில் விடப்பட்டிருந்த 707,000 தேங்காய்களில் சுமார் 29,000 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் தேங்காய் உற்பத்தியானது 13.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொ...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!
ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் - அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை!
|
|