தேங்காயின் விலை வீழ்ச்சி!

நாட்டின் காலநிலை தற்போது வழமைக்கு திரும்புகின்றமையால் தேங்காயின் விலை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபிலயகந்தவல தெரிவித்துள்ளார்.
45 ரூபா முதல் 65 ரூபா வரை தேங்காயின் விலை வீழ்ச்சி அடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருட நடுப்பகுதி முதல் தேங்காயின் விலை 75 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேங்காய் அறுவடை எதிர்பார்த்த நிலையை எட்டியுள்ளமை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தேங்காய் போதிய அளவில் இருப்பதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியாக வருடாந்தம் 260 முதல் 270 கோடி வரை தேங்காய் பெறப்படுகிறது. எனினும் கடந்த வருடத்தில் 240 கோடி தேங்காய் மட்டுமே பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புகையிரதம் மீது கல்வீச்சு : ஒருவர் பலி!
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
வறிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 36வது இடத்தில்!
|
|