தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு: மக்கள் கவலை!

Saturday, November 4th, 2017

சந்தையில் தேங்காயின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு தேங்காயை 65 ரூபாவிற்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டன.இருப்பினும் நாட்டின் பல இடங்களிலும் உள்ள கடைகளில் தேங்காய் ஒன்று 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனைசெய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தேங்காயின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை சரியான முறையில்நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts: