தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீடுடைத்துத் திருட்டு!

Wednesday, September 14th, 2016

வீட்டிலுள்ள அனைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் பார்த்து வீடுடைத்துத் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் திங்கட்கிழமை(12) வீட்டிலுள்ள அனைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாண்ட்யஹா மஹோற்சவத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீட்டின் முன்கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த நகை மற்றும் புகைப்படக் கருவி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

ஆலயத்திற்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய வீட்டுக் காரர்கள் வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டிருப்பதையும், வீட்டினுள்ளே பொருட்கள் சிதறுண்டு கிடப்பதையும் அவதானித்து அதிர்ச்சியுற்றுத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

185-robbery-720x480

 

Related posts: