தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவருக்கு விளக்க மறியல்

Wednesday, March 30th, 2016

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும்-8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவரின் 18 ஆயிரம் ரூபா பணத்தைத் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியரொருவரும், தனியார் நோயாளர் பராமரிப்பு ஊழியரொருவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை திருடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடிய பணத்தையும் மீட்டனர்.

இதனையடுத்துச்  சந்தேகநபர்களை கடந்த திங்கட்கிழமை மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts: