தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்!

Wednesday, November 22nd, 2017

 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் தொழிற்பயிற்சி நிலையமொன்று தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கு பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீர்க்குழாய் பொருத்துனர், மரவேலைத் தொழில் நுட்பவியலாளர், விவசாய உபகரணம் திருத்துநர் மற்றும் கட்டட நிர்மாண உதவியாளர் ஆகிய பயிற்சி நெறிகள் இடம்பெறவுள்ளதுடன் பயிலுநராக இணைய விரும்புவோர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே கைதடி, காரைநகர், சுன்னாகம், பண்டத்தரிப்பு, பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: