தெல்லிப்பளையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி

Monday, March 7th, 2016

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 1.30 மணியளவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பகுதியில் மிக வேகமாகப் பயணித்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தின் போது யாழ்ப்பாணம் சாவல்கட்டுப் பிரதேசத்தை சேர்ந்த அ.கவிராஜ்(19), செ.புவிதரன்(22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

accident_thellippalai_006