தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு – நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தகவல்!

Wednesday, April 24th, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 637 பேர் நிரந்தர உடல்நலப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: