தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு – பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் செப்டம்பரில்!

Monday, July 17th, 2017

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு தொடர்பான பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் ஒன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டமானது நேபாள தலைநகர் காத்மண்டுரில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு பாகிஸ்தான் தலைநகர் ஸ்லாமாபாத்தில் இடம்பெறவிருந்தது.

எனினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான முரண்பாடு தீவிரமடைந்தை தொடர்ந்து, பாதுகாப்புக்களை காரணம் காட்டி இந்தியா புறக்கணித்த நிலையில், இலங்கை உள்ளிட்ட உறுப்பு நாடுகள் குறித்த மாநாட்டில் பங்கொள்ளப் போவதில்லை என அறிவித்தன

இதனை தொடர்ந்து அந்த மாநாடு தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை பலனளிக்கவில்லை

இந்தநிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் காத்மண்டுரில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையிலான கூட்டம் முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் - ஆளு...
சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது - சர்வதேச நாணய நிதியம் த...