தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ சிறந்த நாடு இலங்கை!

தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ இலங்கை சிறந்த நாடாக உள்ளது என ஆய்வொன்றில் கணடறியப்பட்டுள்ளது.
Global Watch Index என்ற சுட்டெண்ணுக்காக வாழ்க்கைத் தரத்தை கணிக்கும் பல காரணிகளின் அடிப்படையில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதன் பிரகாரம் உலக கண்காணிப்பு சுட்டெண்ணில் இலங்கை 46வது இடத்தில் உள்ளது
தெற்காசிய பிராந்தியத்தில் முதியவர்கள் வாழ பொருத்தமான நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் 67வது இடத்திலும் இந்தியா 71வது இடத்திலும் பாகிஸ்தான் 92வது இடத்திலும் இருக்கின்றன. இலங்கை 46வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் சுட்டெண் பட்டியலைத் தயாரிக்க வருமான பாதுகாப்பு சுகாதாரம் தனிநபர் ஆற்றல் முதியவர்கள் வாழ ஏதுவான சூழ்நிலை முதலான காரணிகள் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்துகளுக்கான கட்டண திருத்தம் ஜுனில்!
அரச மற்றும் தனியார் துறையினரின் வினைத்திறனற்ற சேவையாற்றலே நாட்டின் பிரச்சினை – ஜனாதிபதி சுட்டிக்காட்...
உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு!
|
|