தெற்காசிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர்!

புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது அமைச்சரினால் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதேநேரம் கடந்த தினம் இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி சந்தித்து, தற்போதைய நாட்டு நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!
நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
|
|