தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்வது இடம்!

Wednesday, April 21st, 2021

உலக ஊடக சுதந்திரம் தொடர்பான 2021 சுட்டெண்ணுக்கு அமைய தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்திற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

தெற்காசிய நாடுகளில் முதலிடத்தில் நேபாளம் காணப்படுகின்றது. இலங்கைக்கு அடுத்ததாக இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.

உலக ஊடக சுதந்திரம் முழுமையாக நாடுகள் பட்டியலில் நோர்வோ, பின்லாந்து, சுவீடன், டென்மார்க், கொஸ்டாரிக்கா, நெதர்லாந்து, ஜேர்மனி, நியுசிலாந்து, போர்த்துக்கல், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

அதேநேரம் ஊடக சுதந்திரம் இல்லாத 10 நாடுகள் பட்டியலில் எரித்திரியா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான், சீனா, வியட்நாம், ஈரான், சிரியா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

180 நாடுகளைக் கொண்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகளாவிய ரீதியில் இலங்கை 127 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

நேபாளம் 106 ஆம் இடத்தில் காணப்படும் அதேவேளை, இந்தியா 142 ஆவது இடத்தில் காணப்படுவதுடன் பாகிஸ்தான் 145 ஆவது இடத்திலும் பங்ககளாதேஷ் 155 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் 177 வது இடத்தில் சீனாவும், 179 வது இடத்தில் வடகொரியாவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: