தெரு நாய்களுக்கு CCTV கெமராக்கள் – அமைச்சர்  பைஸர் முஸ்தபா நடவடிக்கை!

Wednesday, February 22nd, 2017

தெரு நாய்களை பொது இடங்களில் விட்டுச் செல்கின்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கால் நடைகள் மற்றும் தெரு நாய்கள் நலன்புரி அமைப்பின் ஆலோசனைக் குழுவுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சரினால் இக் குழுவுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி உள்ளிட்ட நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது;
தெரு நாய்களை வீதிகளில் அல்லது பொது இடங்களில் கொண்டு வந்து விடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறைத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களின் நடவடிக்கைகளை துள்ளியமாகக் கண்டுபிடிப்பதற்கு CCTV கெமராக்களைப் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கெமராக்கள் பாதுகாப்பாக, மறைமுகமாக பொது இடங்களில் பொருத்தப்படும். அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1-50

Related posts: