தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.
கூட்டிணைந்த சமூகப்பொறுப்பு மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியீட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கிணறு திருத்தம் உட்பட்ட வேலைத்திட்டம் உள்ளடங்கலாக விவசாய உபகரணங்களும் உள்ளீடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் உட்பட திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கட்டம் கட்டமாக வழங்கப்படும் இந்த உதவித்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக விவசாயத்தினைக்களம் தெரிவித்துள்ளது.
நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உள்ளீடுகளை வழங்கி வைத்தார்.
Related posts:
|
|