தெரிவுக் குழுவிற்கான ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இன்று பெயரிடப்படவுள்ளனர் !

Tuesday, November 20th, 2018

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான தங்களது அங்கத்தவர்களது பெயர்கள் இன்றையதினம் முன்மொழியப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த பெயர் விபரங்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற பொது செயலாளரிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெரிவுக் குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் வெளிப்படுத்தியது.

அதன் பின்னர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்டவர்களும் இந்த நிலைப்பாட்டை முன்வைத்தார்கள்.

ஆளும் கட்சி என்ற அடிப்படையில் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்களது எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் தங்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக் குழுவில் சபாநாயகர் உள்ளிட்ட 12 பேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: