தென்மாகாணத்தில் வைரஸ் தொற்றுடையோர்  எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, May 26th, 2018

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ்தாக்கம் தங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸ் காரணமாக தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: