தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து கடந்த 21ஆம் திகதியிடப்பட்டு குறித்த கடிதம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகப் பல தரப்பினரிடமும் மக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அறுபது கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாகப் பிரியும் பட்சத்தில் தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – தென்மராட்சி மேற்கு பிரதேச செயலகம் என இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது.
இதேவேளை தென்மராட்சி கிழக்கு 28 கிராம அலுவலர் பிரிவுகளாகவும், தென்மராட்சி மேற்கு 32 கிராம அலுவலர் பிரிவுகளாகவும் பிரித்துக் கடந்த காலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|