தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – மக்கள் வெளியேற்றம் – வயற்காணிகள் நிலங்கள் நாசம்!

Tuesday, November 3rd, 2020

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில தினங்களாக ஊர்காவற்துறை, நாவாந்துறை, பூநகரி பிரதேசங்களில் கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.

அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.

அதேவேளை, தென்மராட்சி, தனங்களப்பு பகுதியில் 20 வயற்காணிகளான சுமார் 6 ஏக்கர் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளதனால் 6 ஏக்கர் நெற் செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால், இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: