தென்மராட்சியில் டெங்குத் தாக்கம் குறைவு – சுகாதாரத் திணைக்களம்!

Friday, May 4th, 2018

தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத்தாக்கம் முற்றாகத் தணிந்துள்ளதென சுகாதாரத் திணைக்களப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்குவின் தாக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது எனவும் இதற்கு பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள டெங்கு தொடர்பான விழிப்புணர்வே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 82 பேரும் பெப்ரவரி மாதத்தில் 104 பேரும் மார்ச் மாதத்தில் 160 பேரும் ஏப்ரல் மாதத்தில் 58 பேருமாக 304 பேர் டெங்குவினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் இந்த வருடம் ஜனவரியில் 57 பேரும் பெப்ரவரியில் 25 பேரும் மார்ச் மாதத்தில் 28 பேரும் ஏப்ரல் மாதத்தில் 10 பேருமாக 110 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய சுகாதாரத் திணைக்களம், மாகாண சுகாதாரத் திணைக்களம், தென்மராட்சி பிரதேச செயலகம் போன்றவையின் வழிகாட்டுதலில் பிரதேசத்தில் சுகாதாரப் பகுதியினரால் மேற்கொண்ட டெங்குக் கட்டுப்பாடு செயற்பாடுகளாலும் டெங்கு தொடர்பாக நடத்திய விழிப்புணர்வு நடவடிக்கைகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை இனங்கண்டு அப்புறப்படுத்தியதுடன் வெற்றுக் காணிகளைத் துப்பரவாக வைத்திருந்தமையாலும் டெங்குவின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: