தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் வீழ்ச்சி!

Tuesday, April 4th, 2017

குடாநாட்டிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையாலும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாகவும் யாழ்.கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகப் போதியளவு மீன்கள் சந்தைகளிற்கு எடுத்து வரப்படாமையால் தென்பகுதிக்கான ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீன்களின் பிடிபாடு குறைவடைந்தமையால் யாழ். குடாநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts: