தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதியை பிரதேச செயலாளரிடம் பெற்றுக் கொள்வதை அத்தியாவசியமாக்கி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது
இது தொடர்பான சட்டமூலம், சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் வீடொன்றை நிர்மாணிக்கும்போது அங்கு காணப்படும் தென்னை மரங்களை வெட்டுவதற்குரிய அனுமதி வழங்கப்படவுள்ளது.
எனினும், தேவையற்ற விதத்தில் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்படாது என தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான சட்டமூலம், நாடாளுமன்ற அனுமதிக்காக விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறைகளில் சி.சி.டி.வி கமெரா பொருத்தும் திட்டம் நிறுத்தம்!
10 எண்ணெய் களஞ்சியங்கள் இலங்கைக்கு!
பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை விரைவில் வெளியிட உத்தரவு!
|
|