தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்துவதில்லை – உற்பத்திக் குறைவுக்கு இதுவும் காரணம் என்கிறது தென்னை ஆராய்ச்சி நிலையம்!

Monday, February 19th, 2018

தென்னைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 30 சதவீதமானவர்களே பசளைகளைப் பயன்படுத்துகின்றனர். தற்பொது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணம். இவ்வாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கலாநிதி லலித் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

தென்னை பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது. பருவநிலை மாற்றங்களும் கடும் வரட்சியும் தென்னை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாகவே தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை இனிவரும் காலங்களில் எதிர்கொள்வதற்கு எங்கள் நிலங்களை வளமாக்கிக் கொள்ள வேண்டும்.

தென்னை ஆராய்ச்சி நிலையம் என்ற ரீதியில் நாங்கள் சில ஆராய்ச்சிகளை நடாத்தி வருகின்றோம். பெரிய தென்னந் தோட்ட நிறுவனங்களும் அரச கால்நடை அதிகாரசபையும் எங்களுடன் சேர்ந்து செயற்படுகின்றார்கள். என்றார்.

Related posts: