தென்னை பயிர்ச்செய்கை சபையின் விழிப்புணர்வு !
Saturday, June 30th, 2018தென்னைப் பயிரச்செய்கை சபையின் தென்னை தொடர்பான விரிவாக்கல் நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் கடந்த 26 ஆம் திகதி காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு அம்பாள்புரம், பனங்காமம், அம்பலபெருமாள் குளம் ஆகிய மூன்று கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன், பண்ணைத் திட்டமிடல் உத்தியோகத்தர் சற்குணன், தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.சபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தென்னை தொடர்பான தொழில்நுட்பக் கருத்துக்கள், பசளைப் பிரயோகங்கள், நடுகை முறைகள், கோடை காலங்களில் மண்ணீர் பாதுகாப்பு, உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இப்பிரதேசங்களில் தென்னை வளர்க்கக்கூடிய நிலங்கள் இருந்த போதிலும் பொருளாதார வசதி குறைவாக இருப்பதனால் தென்னைப் பயிரச்செய்கை சபை மூலம் வழங்கப்படும் மானியங்கள், ஆலோசனைகளைப் பெற்று படிப்படியாக தென்னை செய்கையை மேற்கொள்ள வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் மூலம் ஏற்படும் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக தென்னை கற்பகதரு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் சுழற்சி முறைக் கடன்களை பெற்று நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
இதன்போது மக்கள் தம் கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளாக யானை தொடர்பான பிரச்சினைகள், கோடை காலங்களில் கிணறுகள் ஆழ்ப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர். இதற்கு கருத்துத் தெரிவித்த பிராந்திய முகாமையாளர், அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மேலதிக நிதித் தேவைக்காக குறித்த திணைக்களங்களிற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து கற்பகதரு சங்கங்களை அபிவிருத்தி செய்து சங்கங்கள் மூலமான கடன்களைப் பெற்று தங்களின் தென்னந்தோட்டங்களை தாமே அபிவிருத்தி செய்வதன் ஊடாக வருமானங்களைப் பெற்று வாழக்கைத் தரத்தை உயர்த்துமாறு கேட்டுக் கொண்டார்.
Related posts:
|
|