தென்னை உற்பத்தி 18.6 சதவீதத்தினால் வீழ்ச்சி!

நாட்டில் தென்னை உற்பத்தி 18.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடத்தில் குறிப்பட்ட காலப்பகுதியில் 3.011 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டபோதும் தற்போது 2.449 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட வரட்சியால் உயர் தென்னை உற்பத்தி பிரதேசமான குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா உள்ளிட்ட தென்னை உற்பத்தி நாடுகளிலும் வரட்சிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நாடுகளிலும் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
யூரியா உரம் பற்றாக்குறை: அம்பாறை விவசாயிகள் பாதிப்பு!
10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு - அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்க...
|
|