தென்னைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு கடந்த வருட மானியம் விரைவில் வரும்!

Sunday, January 13th, 2019

வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்குக் கடந்த வருட மானியத்துக்கான காசோலைகள் அனைத்தும் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் வழங்கப்படும் என்று யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கைச்சபை தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தென்னைச் செய்கையாளர்களுக்குப் பல்வேறு வேலைகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஊடுபயிர்ச்செய்கை, பசளைப் பாவனை போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காகக் கடந்த வருடம் 7.5 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகக் கிடைக்காமையால் மானியத்துக்கான காசோலைகள் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தென்னை செய்கையாளர்களில் அநேகமானவர்களுக்குக் கடந்த வருடம் மானியத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டம் 230, முல்லைத்தீவு மாவட்டம் 130, கிளிநொச்சி மாவட்டம் 30 பயனாளிகளுக்கு மானியத்துக்கான காசோலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் அனைத்துத் தென்னைச் செய்கையாளர்களுக்கும் மானியத்துக்கான காசோலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.