தென்னைகளைத் தாக்கும் பூச்சிகளுக்கான உயிர்கொல்லி தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை!
Friday, May 25th, 2018தென்னைகளைத் தாக்கும் பூச்சிகளுக்கான உயிர்கொல்லி தயாரிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தேங்காய்கள் காய்த்தாலும் அவற்றின் அளவு சிறிதாகவும் பால்தன்மை குறைவாகவும் காணப்படுகின்றன.
இதற்கு முதன்மைக் காரணம் மைற்றா பூச்சியாகும். இதற்கான உயிர்கொல்லியை தென்னையில் வைப்பதன் மூலம் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
இந்த உயிர்கொல்லி அளம்பில் மற்றும் பளையில் அமைந்துள்ள ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்படுகின்றது. இதன் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைமை செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மைற்றா உயிர்கொல்லிப் பாவனை அவசியமாகும். அப்போதுதான் தேங்காயின் தரத்தை அதிகரிக்க முடியும். ஒரு நாளைக்கு 125 பைக்கற்றுகள் உற்பத்தி செய்ய வேண்டும். ஒரு பைக்கற்றில் 5 ஆயிரம் உயிர்கொல்லி வரை அடைக்கப்படுகின்றது. இது அடைக்கப்பட்டால் சில நாள்களின் பின்னர் இது இறந்து விடும்.
ஆகவே அது பின்னர் பயன்படுத்த முடியாது. உற்பத்தி செய்யப்பட்ட மைற்றா 60 வீதமானவையே பயன்படுத்தும் நிலையில் இருக்கும். ஒரு பைக்கற் 10 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுகின்றது. சபையின் பயனாளிகளுக்கு இலவசமாக மானிய முறையில் வழங்கப்படுகின்றது. ஆகவே உற்பத்தி அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான வசதிகளை செய்து தருமாறு சபையால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|