பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி மரணம்!

பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 87வது வயதில் காலமானார்.
இவர் 1950ஆம் ஆண்டு தொடக்கம் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடி புகழ் பெற்றவராவார். இதனால் இவர் மழலைக்குரல் பாடகி என அழைக்கப்பட்டார்.
கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கன்னம்மா படத்தில் இடம் பெற்ற ‘அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடியதும் இவர்தான்.
மேலும், இவர் பாடிய மியா மியா பூனைக்குட்டி, ஓ ரசிக்கும் சீமானே, கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.
கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
Related posts:
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ !
சிறைச்சாலைகளில் விசேட பரீட்சை நிலையங்கள்!
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...
|
|