தென்னிந்திய தொலைக்காட்சி நாடகம் பார்த்து பொய்யுரைத்தேன்: குற்றம் செய்த சிறுவன் பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு!
Saturday, April 6th, 2019நண்பர்களுடன் நீண்ட விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன், பெற்றோரிடம் சென்று தன்னை யாரோ கைஏஸ் வானில் கடத்திச் சென்றனர் என்ற கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது எனினும் பெற்றோர் கண்டிப்பர் என்பதால் அவர்களிடமிருந்து தப்புவதற்காக அவ்வாறு கூறினேன் என்றும் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதால் அவ்வாறு பொய் சொல்லலாம் என்பதை தெரிந்து கொண்டேன் என்றும் பொலிஸ் விசாரணையில் உண்மையைக் கூறியுள்ளான் சிறுவன்.
இந்தச்ம்பவம் வடமராட்சி மாலு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்றத.
தரம் 8 இல் கல்வி கற்கும் சிறுவன் விளையாடச் சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பதற்றமடைந்தனர். பல இடங்களிலும் தேடினர் என்று தெரிவிக்கப்பட்டது.
இரவு 8 மணியை அண்டி வீடு திரும்பிய சிறுவன் தான் வீதியில் பயணித்த சமயம் வான் ஒன்றில் வந்த மூவர் வானில் தூக்கிச் சென்று சன்னிதி கோவிலுக்கு அருகில் தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தான்.
இதனால் வாய்த்தகரான தந்தை பதற்றமடைந்தார். நெல்லியடிப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று முறைப்பாடு செய்தார். பொலிஸார் சிறுவனிடம் முறைப்பாடு செய்தனர். கைஏஸ் வாகனத்தில் வந்திருந்த மூவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்பது உட்பட மாறுபட்ட தகவல்களைச் சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளான். பொலிஸார் சிறுவனை எச்சரித்து விசாரணை செய்த போதே இது தெரிய வந்தத்து.
Related posts:
|
|