தென்னிந்திய இசை கலைஞர்கள் பலர் கலந்துகொள்ளும் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

Saturday, October 21st, 2023

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெறும் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக கலைஞர்கள் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வானது இன்றைதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: