தென்கொரியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் ருவான் விஜேவர்தன தெரிவிக்கையில், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலங்கை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ள அதேவேளை இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Related posts:
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பாதுகாப்பிற்கு பொலிஸார் நியமனம்!
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு பழக்கத்தை கைவி...
|
|