தென்கொரியாவில் எந்தவொரு இலங்கையரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு!
Saturday, February 22nd, 2020தென்கொரியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக பரவி வரும் நிலையில், அங்குள்ள எந்தவொரு இலங்கையரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசியமான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமைய குறித்த தொலைபேசி இலக்கத்தை இன்றைய தினத்திற்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.
77 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 75 ஆயிரத்து 899 பேர் சீனாவில் இனங்காணப்பட்டுள்ளனர். இதேநேரம், ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|