தூர நோக்குடைய அரசியல் தலைமையை ஏற்படுத்துவதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும்  வென்றெடுத்தவர்களாக பரிணாமம் பெறமுடியும் – கா வே குகேந்திரன்

Wednesday, April 27th, 2016

தமிழ் மக்கள் அரசியலில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கம் நிலைக்குள் தம்மை தயார்ப்படுத்தாமையே இன்றுவரை பலவிதமான அசௌகரியகளையும் ஆறாத வடுக்களையும் சுமந்து எதிர்கால வாழ்க்கைக்காக மற்றவர்களை எதிர்பார்த்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட செயற்குழு நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) தெரிவித்துள்ளார்.

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தின் 67 ஆவது ஆண்டு விழாவும் விளையாட்டு நிகழ்வும் கடந்த 23ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்’

தமிழ் மக்களை நேசிக்கும் தூர நோக்குடைய அரசியல் தலைமையை மக்கள் ஏற்படுத்திக்கொள்வதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும்  வென்றெடுத்தவர்களாக பரிணாமம் பெறமுடியும். அத்தகைய ஒரு களத்தை உருவாக்க மக்கள் முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்கள் அரசியலிலும் அவர்களது அபிவிருத்தியிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரது பணிகளூடாகத்தான் இன்றுவரை தமிழ் மக்களது வாழ்வியல் சீரானமுறையில் ஒடிக்கொண்டிருக்கின்றது. இதை எவரும் மறுத்துவிடமுடியாது.

அத்தகைய  தேவைகள் பலவற்றை எமது கட்சியூடாக பெற்றுக்கொண்ட அமைப்புகளுள் இந்த காந்தி சனசமூக நிலையமும் ஒன்றாகும். கடந்த காலத்தில் எமது அபிவிருத்தி பணிகளூடாக நாம் மேற்கொண்ட வந்த நடவடிக்கைகள் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மாற்றங்களை கண்டுள்ளது.

மத்தியில் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது தான் தமிழ் மக்கள் கண்ட ஒரு மாற்றமே தவிர வாழ்வியலில் இதுவரை எதனையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம் வெறும் சுயநல அரசியல் மேற்கொள்ளும் கூட்டமைப்பினரை தமது பிரதிநிதிகளாக  நாடாளுமன்றம் அனுப்பியதும் அவர்கள் மக்களது பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக்கவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் தான். இந்த நிலைமைகள் மாற்றம் பெறுவதற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தமது அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என தெரிவித்தார்.

13083136_479854068880125_3985612987661078_n

13015647_479854132213452_5867346094392627322_n

13062159_479854185546780_5360934993320680466_n

Related posts: