தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே வறுமை நிலைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட நிர்வாக செயலாளர் புஸ்பராசா!

Monday, August 6th, 2018

தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் பெரும் துன்ப துயரங்களுக்கு போலித் தமிழ் தேசியம் பேசும் தூரநோக்கற்றவர்களது வெற்றுப் பேச்சுக்களே காரணமாக இருந்துவருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமலை மாவட்ட நிர்வாக செயலாளர் தங்கராசா புஸ்பராசா தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தின் பீலியடி கிராமத்தில் கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட எமது கட்சியின் செயற்பாடுகளை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவான மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்பதன் அடிப்படையில் திருமலை மாவட்டத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் முகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் இவ்வாறான கட்டமைப்பை நாம் உருவாக்கி வருகின்றோம்.

அந்தவகையில் இந்த கட்டமைப்பினூடாக நாம் எமது கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முழுமையாக இந்த மாவட்டத்திலும் செயல்படுத்தி மக்களுக்கான சிறந்ததோரு வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நாம் அயராது உழைப்போம் என்றார்.

பீலியடி கிராமத்தில் நகரமும் சூழலும் பிரதேச சபைக வட்டார நிர்வாக செயலாளர் திருமதி.கிருஸ்ணமூர்த்தி பவானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் நகர நிர்வாகச் செயலாளர் இராசையா சுதா மக்கள் தொடர்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts: