தூக்குத் தண்டனை முடிவைக் கைவிட வேண்டும் – பன்னாட்டு நீதிபதிகள் ஆணையம்!

தூக்குத் தண்டனை விதிப்பது தொடர்பான உறுதியை திரும்பப் பெறுமாறு பன்னாட்டு நீதிபதிகளின் ஆணையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது.
தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை மீறுவதாக அமையும் என்றும் குறித்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எந்த சூழ்நிலையிலும் தூக்குத் தண்டனையை எதிர்ப்பதாகவும் இது வாழ்வுரிமை மீறலாகவும் மனிதாபிமானமற்ற சீரழிவு என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் தூக்குத் தண்டனை விதிப்பது உறுதி என கடந்த வாரம் நாடாளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்!
யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!
யுக்ரைனுடனான மோதல் - உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
|
|